fbpx

உலகின் மிக விலையுயர்ந்த உருளைக்கிழங்கு..! ஒரு கிலோ 50,000 ரூபாய்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?

உலகின் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாக உருளைக்கிழங்கு கருதப்படுகிறது… இந்தியாவில் பெரும்பாலும் அனைத்து மாநிலங்களிலும் உருளைக்கிழக்கு பயன்படுத்தப்படுகிறது.. மலிவான விலைக்கு விற்கப்படுவதால் உருளைக்கிழங்கு பரவலாக பயன்படுகிறது.. ஆனால் உலகின் மிகவும் விலை உயர்ந்த உருளைக்கிழங்கு பற்றி தெரியுமா.. இது ஒரு கிலோவுக்கு 40,000-50,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆனால் வருடத்திற்கு 10 நாட்களுக்கு மட்டுமே இந்த உருளைக்கிழங்கு கிடைக்கும்.

Le Bonnotte என்ற இந்த உருளைக்கிழங்கு. பிரான்சில் உள்ள Ile De Noirmoutier என்ற தீவில் வளர்க்கப்படுகிறது. இந்த உருளைக்கிழங்கு மிகவும் அரிதானது, இது 50 சதுர மீட்டர் நிலத்தில் மட்டுமே பயிரிடப்படுகிறது. இந்த உருளைக்கிழங்குகள் மணல்பாங்கான நிலத்தில் மட்டுமே பயிரிடப்படுவதால் அவை சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவதாகவும், கடற்பாசி மற்றும் பாசிகள் உரங்களாக வேலை செய்வதால் உலகின் விலையுயர்ந்த உருளைக்கிழங்கு ஆகும் என்றும் கூறப்படுகிறது. Le Bonnotte உருளைக்கிழங்கின் சுவை மற்றவற்றிலிருந்து வேறுபட்டது, அதாவது இது சிறிது உப்பு சுவையாக இருக்கும்..

இந்த உருளைக்கிழங்கின் தோல் மண்ணின் அனைத்து நறுமணங்களையும் சுவைகளையும் மற்றும் அருகிலுள்ள கடல்நீரையும் உறிஞ்சுவதால், இந்த உருளைக்கிழங்கின் தோலை உரிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. தீவில் அறுவடை செய்யப்படும் 10,000 டன் உருளைக்கிழங்குகளில், 100 டன்கள் மட்டுமே La Bonnette ஆகும.. இதன் காரணமாகவே இது விலை உயர்ந்ததாக கருதப்படுகிறது… இந்த சிறப்பு உருளைக்கிழங்கு சாலட் ப்யூரி, சூப் மற்றும் கிரீம் தயாரிக்க பயன்படுகிறது. கடுமையான நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்க இந்த உருளைக்கிழக்கு பயன்படுத்தப்படுகின்றன என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவை பல்பொருள் அங்காடிகளில் கிடைக்காது. ஆன்லைன் தளங்களில் மட்டுமே மக்கள் அதனை வாங்க முடியும்…

Maha

Next Post

வெப்ப அலை தாக்கம்..? தார் சாலைகள் உருகியதால் வாகன ஓட்டிகள் அவதி..

Wed Apr 12 , 2023
நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.. இந்நிலையில் ஏப்ரல் முதல் இந்தியாவின் பல இடங்களில் இயல்பான வெப்ப அலை ஏற்படக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) தெரிவித்துள்ளது. கோடை காலமாக கருதப்படும் ஏப்ரல் முதல் ஜூன் வரை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான வெப்பநிலையை விட அதிக வெப்பநிலை இருக்கும் […]

You May Like