fbpx

இந்த நாட்டில் திருமணமாகாமலே பெண் தாயாகலாம்.. தந்தையின் பெயரை கூட சொல்ல வேண்டாம்..

முஸ்லிம் நாடுகள் என்றாலே புர்கா அணிந்த பெண்கள், பைஜாமா அணிந்து நீண்ட தாடி உடன் இருக்கும் ஆண்கள் ஆகியவை தான் நம் நினைவுக்கு வரும். முஸ்லீம் நாடுகளில், குறிப்பாக பெண்களுக்கு கடுமையான விதிகளுடன் இருக்கும் என்று நாம் அனைவரும் நினைத்திருப்போம். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற பகுதிகளில் கடுமையான விதிகள் உள்ளன. இருப்பினும், முஸ்லிம் பெண்கள் தங்கள் வாழ்க்கையை மிகவும் சுதந்திரமாக வாழும் சில நாடுகள் உள்ளன.

உலகில் சுமார் 1.8 பில்லியன் மக்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறார்கள். அதாவது, உலகின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் இஸ்லாத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்த முஸ்லிம் நாடுகளில் ஒன்று மிகவும் நவீனமான நாடாக உள்ளது. ஆம்.. அங்கு திருமணமாகாத ஒரு பெண் கூட தாயாக முடியும். அது வேறு எதுவும் இல்லை. சவுதி அரேபியா தான்.

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியா, உலகில் உள்ள முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் மிக நவீன முஸ்லிம் நாடாகும். சில ஆண்டுகளுக்கு முன்பு, இங்கு வாழும் பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தாயாக அனுமதிக்கப்படும் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இருப்பினும், இங்கு வாழும் முஸ்லிம் அல்லாத மக்களுக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இதற்கு ‘கூட்டாட்சி தனிநபர் அந்தஸ்து சட்டம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகம் இந்த புதிய விதியை அறிமுகப்படுத்தியபோது, ​​இது உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டது. சவுதி அரேபிய அரசாங்கம் இந்தச் சட்டத்தை ஐரோப்பாவின் எந்த நாட்டிற்கும் ஒப்பிடக்கூடிய அளவுக்கு தாராளமயமாக்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் முஸ்லிம் அல்லாத மக்களின் திருமணம், விவாகரத்து, குழந்தை பராமரிப்பு, சொத்துரிமை, உயில் போன்றவற்றைப் பொறுத்தவரை இந்தச் சட்டம் மிகவும் தாராளமானது. இந்தச் சட்டத்தின் மூலம், இங்கு வசிக்கும் வெளிநாட்டினர் தங்கள் விருப்பப்படி வாழ அதிக மத சுதந்திரத்தையும் வழங்கியுள்ளனர்.

பணக்கார நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவால் உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ், ஒரு பெண் திருமணம் செய்து கொள்ளாமலேயே தாயாக முடியும். இதற்காக அவள் குழந்தையின் தந்தையின் பெயரைக் கூட வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. குழந்தையின் பிறப்புச் சான்றிதழை கணவரின் பெயர் இல்லாமல் கூட தயாரிக்கலாம்.

இந்தச் சட்டத்தின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் எந்தவொரு முஸ்லிம் அல்லாத பெண்ணும் தனது 21 வயதில் தனது தந்தை அல்லது குடும்பத்தினரின் ஒப்புதல் இல்லாமல் தனது விருப்பப்படி ஒருவரை திருமணம் செய்து கொள்ளலாம். மறுபுறம், ஒரு முஸ்லிம் அல்லாத தம்பதியினர் விவாகரத்து செய்ய விரும்பினால், அவர்கள் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்யலாம். அல்லது கணவன் அல்லது மனைவி இருவரில் ஒருவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகலாம். இந்த சட்ட சீர்திருத்தம் நவம்பர் 27, 2021 அன்று அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : பிணத்தை சூப் வைத்து குடிக்கும் மக்கள்.. முதலிரவில் உடன் இருக்கும் தாய்..! அதிர வைக்கும் பழங்குடியினர்களின் வாழ்க்கை முறை..!!

Rupa

Next Post

பிரார்த்தனைக்கு சென்ற 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 63 வயது மதபோதகர்..!! மனைவி, மகனுன் உடைந்தை..!! கன்னியாகுமரியில் அதிர்ச்சி

Tue Feb 25 , 2025
Police arrested and imprisoned a 63-year-old religious preacher and others for raping a 13-year-old girl and impregnating her.

You May Like