கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் போடம்பட்டியை சேர்ந்தவர் மாதேஷ்(27) என்பவர். இவர் கூலித்தொழிலாளியாக இருக்கிறார். மனைவி ஞானமலர்(21). இந்த தம்பதிகளுக்கு 2 வயதில் மகனும், 9 மாத ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்த நிலையில், ஞானமலருக்கும், அதே ஊரை சேர்ந்த விவசாயி தங்கராஜ்க்கும்(28) சில காலங்களாக கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருக்கிறது.
இது பற்றி தகவல் அறிந்ததும் மாதேஷ், மனைவியை பலமுறை கண்டித்துள்ளார். இதனை ஞானமலர், தங்கராஜிடம் கூறிய நிலையில், குழந்தைகள் இருப்பது தான் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கிறது என்று தங்கராஜ் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஞானமலர் திட்டமிட்டு தனது 2 குழந்தைகளுக்கும் எலிபேஸ்டை சாப்பிட கொடுத்துள்ளார். அதனால், மயங்கி விழுந்ததை அக்கம்பக்கத்தினர் பார்த்து விசாரித்தபோது, காவல்துறையினரிடம் மாட்டிக் கொள்வோம் என்று பயந்து இவரும் விஷத்தை குடித்து விட்டார். அதன் பின்னர் உடனடியாக 3 பேரையும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதனிடையில் 9 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனையடுத்து மாதேஷ் தன் மனைவி மற்றும் கள்ளக்காதலன் ஆகிய இருவர் மீதும் புகார் அளித்துள்ளார். மேலும் இவர்களின் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிகிச்சை முடிந்ததும் ஞானமலைரை கைது செய்ய முடிவு செய்திருக்கின்றனர். மேலும் தங்கராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.