mother’s name: ஆதார், பான், பிறப்பு சான்றிதழ் என அனைத்து அரசு ஆவணங்களிலும் தாயாரின் பெயரும் இருக்க வேண்டும் என மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மே 1,2024 முதல் அமலுக்கு வரும்.
ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகளின் பெயர் கட்டாயமாக்கப்பட்ட விதிமுறையானது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் உள்ளது. இருப்பினும் இதுவரை ஆதார் கார்ட், பான் கார்ட், பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசின் ஆவணங்கள் அனைத்திலும் உரிமையாளரின் தந்தை பெயர் மட்டுமே இடம் பெற்று வந்தது. மேலும், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2014 மே 1 ஆம் தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகளின் அனைத்து ஆவணங்களிலும் தாயார் பெயர் இருப்பது கட்டாயம் என அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி வருகிற மே 1ஆம் தேதி முதல் இந்த புதிய விதி அமலுக்கு வர இருப்பதால் ஆதார் அட்டை, பான் கார்டு, பிறப்புச் சான்றிதழ், பள்ளி ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் என அனைத்து அரசு ஆவணங்களிலும் தாயார் பெயர் இணைக்க வேண்டும். ஆனாலும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு, இந்த புதிய வீதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.