fbpx

புதிய மாவட்ட ஆட்சியர்கள் இதை எல்லாம் செய்ய வேண்டும்.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை..

புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்..

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.. இதை தொடர்ந்து முதலமைச்சர் புதிய ஆட்சியர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி உள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்.. மாவட்டத்தில் என்னென்ன பணிகள் நடைபெறாமல் இருக்கிறது, என்னென்ன பணி எந்த நிலையில் இருக்கிறது, பணிகள் தொடங்காமல் இருக்க என்னென்ன இடையூறுகள் இருக்கின்றன..?

நீதிமன்றங்களில் என்னென்ன வழக்குகள் இருக்கிறது..? என்பது பற்றி ஆய்வு நடத்தி, அந்த பணிகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மாவட்டத்திற்கான அறிவிப்புகளை கண்காணித்து ஆட்சியர்கள் நிறைவேற்றி தர வேண்டும்.. ‘களத்திற்கு செல்’ என்ற மகாத்மா காந்தியின் கூற்றுப்படி மக்கள் நலப் பணிகளை அதிகாரிகள் திறம்பட மேற்கொள்ள வேண்டும்.. அந்தந்த மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்..

அரசியல் பார்க்காமல், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உணர்வோடு உழைக்க வேண்டும்.. மாவட்ட ஆட்சியர்கள் என்னென்ன பணிகளை முடித்திருக்கிறீர்கள் என்று தலைமை செயலாளரும் ஆய்வு செய்வார்.. முதலமைச்சராகிய நானும் தொடர்ந்து ஆய்வு செய்வேன்.. ” என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

மனைவிகளுக்கு மட்டும் தான்... கணவருக்கு கிடையாது... டெல்லி உயர்நீதிமன்றம்!

Sat Feb 4 , 2023
கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ள ஆண் உறுப்பினர்களை குடும்ப வன்முறை சட்டம் பாதுகாக்காது என டெல்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக கணவர் அளித்த புகாரை ரத்து செய்யக் கோரி, பெண்ணின் மனுவை விசாரித்த நீதிபதி, திருமணமான பெண்களைக் கொடுமையிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் முதன்மையான பாதுகாப்பு, ஒரு குடும்பத்தின் ஆண் உறுப்பினருக்கு, குறிப்பாக கணவனுக்குக் கிடைக்காது என்று தெரிவித்துள்ளார். […]

You May Like