Israel-Hamas: வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்ற யாஹ்யா சின்வாரும் கொல்லப்பட்டுள்ளார் என்ற இஸ்ரேலின் தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் யாஹ்யா உயிருடன் இருப்பதாகவும் ஹமாஸ் கூறுகிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே ஒரு வருடங்களுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேலின் காசா பகுதி மற்றும் மேற்கு கரை ஆகியவை அடங்கிய பாலஸ்தீனம் தனி நாடு அந்தஸ்து கேட்டு, பாலஸ்தீனியர்கள் போராடி வருகின்றனர். இவர்களுடன் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் ஆதரவு அளித்து வருகிறது. கடந்தாண்டு அக்., 7ல் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,200 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் இஸ்மாயில் ஹானியா, ஈரானின் டெஹ்ரானில் கொல்லப்பட்டார்.
ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தலைவராக இருந்து தற்போது புதிய தலைவராக யாஹ்யா சின்வர் கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று( அக்.,17) ஐ.டி.எப். எனப்படும் இஸ்ரேல் ராணுவப்படையினர் காசா பகுதியில் நடத்திய தாக்குதலில் யாஹ்யா சின்வர் மற்றும் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உறுதி படுத்தி உள்ளது.
ஆனால், இது தவறான செய்தி என்றும், தங்கள் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் ஹமாஸ் படையினர் தெரிவித்துள்ளனர். ஹமாஸ் தலைவர்களில் ஒருவரின் “படுகொலை” பற்றி பரப்பப்படும் தவறான செய்திகள் குறித்து வியப்பை வெளிப்படுத்துகிறது. இந்த அறிக்கைகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை. ஹமாஸ் அமைப்பை சீர்குலைக்கும் நோக்கில் திட்டமிட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதி என்றும் நாங்கள் உறுதியளிக்கிறோம்” என்று ஹமாஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Readmore: இந்த கஞ்சியில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? வாரம் ஒருமுறையாவது குடிங்க..!!