fbpx

வேலை நேரத்தில் அதிரடி மாற்றம்…! இனி காலை 7:30 முதல் மாலை 2 மணி வரை..! முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு…!

பஞ்சாப் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை நேரத்தில் மாற்றம் செய்துள்ளது. நேற்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நடவடிக்கை மின்சாரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமல்லாமல் பல நன்மைகளையும் விளைவிக்கும் என்று முதல்வர் பகவந்த் மான் கூறினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்; மாநில அரசு துறைகளின் நேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருந்தது. இனி காலை 7.30 முதல் மதியம் 2 மணி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய கால அட்டவணையில் 30 நிமிட மதிய உணவு இடைவேளையை நீக்குகிறது. இருப்பினும், ஊழியர்கள் முன்பை விட ஒரு மணி நேரம் குறைவாக வேலை செய்வார்கள்.

புதிய வேலை நேரம் ஜூலை 15 வரை அமலில் இருக்கும், இதன் விளைவாக இரண்டரை மாத காலத்தில் ரூ.40 முதல் 42 கோடி வரை சேமிக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அனைவரும் காலை 7:30 மணிக்கு முன்பாக தனது அலுவலகத்திற்குச் சென்று சேர வேண்டும் என செய்தியாளர்களிடம் பேசினார்.

Vignesh

Next Post

TRAI போட்ட அதிரடி உத்தரவு...! இனி பயனர்களுக்கு எளிதில் பதில் அளிக்க வேண்டும்...!

Wed May 3 , 2023
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறையில் எளிதாக வணிகம் செய்வது குறித்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து ட்ராய் வெளியிட்ட அறிவிப்பில்; கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி “தொலைத்தொடர்பு மற்றும் ஒளிபரப்புத் துறையில் எளிதாக வணிகம் செய்வது என்ற தலைப்பிலான ஆலோசனைகளை வெளியிட்டது. இந்த ஆலோசனைகள் மீதான கருத்துகளைத் தெரிவிக்க 2022-ம் ஆண்டு பிப்ரவரி 9-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை […]

You May Like