fbpx

பிரபல இயக்குனருடன் நடிகை சமந்தாவிற்கு நிச்சயதார்த்தம்? இணையத்தில் தீயாய் பரவும் செய்தி..!!

நடிகை சமந்தா தற்போது பிரபல இயக்குனர் ஒருவரோடு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார் என்ற செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021இல் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர்.

சமந்தாவை பிரிந்த பின் நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபியா துலிபாலா  உடன் டேட்டிங்கில் இருந்தார் என்று கூறப்பட்டு வந்தது. சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் லண்டன் ஹோட்டலில் ஒன்றாக இருந்த புகைப்படம் இணையத்தில் கசிந்து பேசு பொருளாகின. அதனைத்தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் இல்லத்தில் சோபியா துலிபாலா உடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்த நிலையில் சமந்தாவின் நிச்சயதார்த்த செய்தி தான் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இதற்கு முன்பு சமந்தா தி ஃபேமிலி மேன் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். அந்த இயக்குனர் ராஜை சமந்தா காதலித்து வந்ததாகவும் சமீபத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்படுகிறது . ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Read more ; ஓடும் ரயிலில் இருந்து கழன்று சென்ற பெட்டிகள்..!! பயணிகள் அதிர்ச்சி

English Summary

The news of actress Samantha getting engaged to a famous director is going viral on social media.

Next Post

"தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்குவோம்"..!! அன்புமணி ராமதாஸ் அதிரடி பேட்டி..!!

Thu Aug 15 , 2024
Bamaka leader Anbumani Ramadoss said that we will make a person from the Dalit community as the Chief Minister.

You May Like