தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நாளையுடன் ஓய்வு பெறுகிறார். இந்த நிலையில் காவல்துறையின் அடுத்த தலைவர் பட்டியலில் இருக்கும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு உள்ளது. சென்னை மாநகராட்சியின் காவல்துறை ஆணையராக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அந்த பதவிக்கு நியமனம் செய்ய அதிக வாய்ப்பு உள்ளது. 1992 ஐபிஎஸ் அதிகாரிகளின் பிரிவை சேர்ந்த ரத்தோர், கடந்த மாதம் டிஜிபி-யாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு முதல் ஆவடி நகர போலீஸ் கமிஷனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல டிஜிபி பதவிக்கு அரசுக்கு நெருக்கமான பலரும் டிஜிபி கனவில் உள்ளனர்.தற்போதைய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர்ஜிவால் தமிழ்நாட்டின் டிஜிபியாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. சஞ்சய் அரோரா மற்றும் சந்தீப் ராய் ரத்தோர், அமல்ராஜ் ஆகியோரின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளன.