fbpx

அடுத்த சம்பவம் ரெடி!. தமிழகத்திற்கு அதிக மழை அலெர்ட்!. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

Heavy rain alert: நவம்பர் மாதத்தில் எம்ஜேஓ (மேடன்-ஜூலியன் அலைவு) எனும் நிகழ்வால் தமிழகத்திற்கு அதிக மழை பெய்யும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

வெப்பச்சலனம் காரணமாக நேற்று, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளிலும், வேலூர், ராணிப்பேட்டை உள்பட உள் மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதன் காரணமாக இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் இடி மழை இருக்கும். அச்சப்படுத்தும் வகையில் இருக்காது என்று கூறியுள்ளார்.

வங்கக் கடலில் அடுத்த வாரம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். ஆனால் இது தமிழகத்திற்கானது அல்ல. இந்த காற்றழுத்தத்தை எண்ணி கவலைப்பட தேவையில்லை. அந்த காற்றழுத்த தாழ்வு பலவீனமாக இருக்கும். அந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அந்தமான் கடலுக்குள் நுழையும் போது நமது சென்னை அட்சரேகைக்கு மேலே இருக்கும். இதனால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இது அந்தமான் அருகே அடுத்த வாரம் இந்தியா, சீனா இடையே உள்ள பகுதியில் உருவாகிறது. ஒரு வேளை இந்த காற்றழுத்தம் வலுவிழந்தால், கிழக்கு நோக்கி வீசும் காற்றால் தமிழகத்தின் பக்கத்திற்கு தள்ளப்படும். அப்போது அதன் தீவிரத்தை வைத்து தான் தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்குமா என்பதை கணிக்க முடியும். ஆனால் அந்த காற்றழுத்தம் தமிழகத்திற்கு வராமலேயே இந்திய- சீன இடையே உள்ள பகுதியிலேயே வலுவடைந்து அங்கேயே கரையை கடக்கவும் வாய்ப்பிருக்கிறது.

நவம்பர் மாதத்தில் எம்ஜேஓ (மேடன்-ஜூலியன் அலைவு) எனும் நிகழ்வால் தமிழகத்திற்கு அதிக மழை பெய்யும். இந்திய பெருங்கடலில் தனது இருப்பை காட்டப் போகிறது. எனவே, எம்ஜேஓ நிகழ்வால் நவம்பரில் அதிக கனமழையை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

Readmore: கொஞ்சம் வானம்.. உயர்ந்த மரங்கள்.. மர வீடு..!! கோவை அருகே சூப்பர் ஸ்பாட்.. வீக்கெண்ட் என்ஜாய் பண்ணுங்க!!

English Summary

The next event is ready! Heavy rain alert for Tamil Nadu in November! Tamil Nadu Weatherman Update!

Kokila

Next Post

அதிர்ச்சி!. வைரஸ்களால் 14 வகையான புற்றுநோய்கள் ஏற்படுகின்றன!. என்னென்ன தெரியுமா?

Sat Oct 19 , 2024
Shock! Viruses cause 14 types of cancer! You know what?

You May Like