fbpx

அடுத்த அதிர்ச்சி!… ஏப்ரல் 1 முதல் 4000 ஊழியர்கள் பணிநீக்கம்?… டிஸ்னி நிறுவனம் திட்டம்!

உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி நிறுவனம் தனது 4000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது

சமீபகாலமாக முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான், பிளிப்கார்ட், ட்விட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் சமீப காலமாக வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகிறது. அந்தவகையில் டிஸ்னி நிறுவனமும் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. தனது நிறுவனத்தில் பணிபுரியும் 4000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிறுவனத்தை மறு சீரமைக்கவும் பட்ஜெட்டை குறைக்க டிஸ்னி நிறுவனம் இந்த வேலை நீக்க நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக பிசினஸ் இன்சைடர் என்ற ஊடகம் ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளதால் அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அதிர்ச்சி உள்ளனர்.ஏப்ரல் மாதம் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களை அடையாளம் காணுமாறு நிறுவனத்தின் மேலாளர்களை மேலிடம் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஏப்ரல் 3ஆம் தேதி அன்று டிஸ்னியின் வருடாந்திர கூட்டத்தொடர் நடைபெற இருப்பதை அடுத்து முன்பே வேலை நீக்க நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுவதால் ஏப்ரல் ஒன்றாம் தேதியே வேலை நீக்க நடவடிக்கை குறித்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kokila

Next Post

அடிதூள்...! வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும்...!

Tue Mar 21 , 2023
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகையாக ரூ. 3,000 வழங்கப்படும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது. பாஜக, காங்கிரஸ் தீவிரமாக தேர்தல் வேலைகளை செய்து வருகிறது. இந்தநிலையில் ராகுல் […]

You May Like