fbpx

அடுத்த ஷாக்.. இஸ்ரேலில் அடையாளம் தெரியாத புதிய கொரோனா மாறுபாடு கண்டுபிடிப்பு.. ஆபத்தானதா..?

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது..

இந்நிலையில் இஸ்ரேலில் ஒமிக்ரான் வகை கொரோனாவின் 2 புதிய மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது..சமீபத்தில் பென் குரியன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த இரண்டு நபர்களிடம் நடத்தப்பட்ட PCR சோதனையின் போது இந்த மாறுபாடு கண்டறியப்பட்டது. இந்த மாறுபாடு BA.1 (Omicron) மற்றும் BA.2 வகைகளின் கலவையாக இருக்கலாம் என்று இஸ்ரேல் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோயாளிகள் பென்-குரியன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் RT-PCR சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு இந்த புதிய மாறுபாடு கண்டறியப்பட்டதாக கூறியுள்ளது.

கொரோனாவின் இந்த புதிய மாறுபாடு தற்போது உலகில் வேறு எங்கும் தெரியவில்லை என்று இஸ்ரேல் சுகாதார அமைச்சகம் தெரிவித்தள்ளது.. இந்த மாறுபாடு காரணமாக காய்ச்சல், தலைவலி மற்றும் தசை வலி போன்ற லேசான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.. எனவே சிறப்பு மருத்துவ கவனிப்பு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்தப் புதிய மாறுபாட்டால் கடுமையான பாதிப்பு ஏற்படுமா குறித்து தற்போது கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் கூறியுள்ளார்.

9.2 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இஸ்ரேலில், 4 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏற்கனவே மூன்று டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.. இன்றுவரை, நாட்டில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் கொரோனா பதிவாகியுள்ளன. இதில் 8,244 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதால், தடுப்பூசி போடப்படாத சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேலின் பிரதமர் நஃப்தலி பென்னட் சமீபத்டில் அறிவித்தார். கடந்த 2020-ம் ஆண்டு நாடு தழுவிய தடுப்பூசி பிரச்சாரத்தை முன்னெடுத்த முதல் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும்.

எனினும் ஒமிக்ரான் மாறுபாடு காரணமாக, கொரோனா பரவலில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தனிநபர்கள், சுகாதாரப் பணியாளர்களுடன் சேர்ந்து, கோவிட் தடுப்பூசியின் நான்காவது டோஸ் வழங்கப்படும் என்று இஸ்ரேலிய அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ஏன்...? முதன்முறையாக மனம் திறந்தார் மணிமேகலை.....!

Fri Mar 17 , 2023
விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி குக்வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்திலிருந்து கோமாளியாக இருந்து வருபவர் தான் மணிமேகலை. புகழ், சிவாங்கி, பாலா போன்ற எல்லோரும் நகைச்சுவை செய்வதை போல ஒரு ட்ராக் என்றால் மணிமேகலை ஒரு விதத்தில் காமெடி செய்து நிகழ்ச்சியை கலகலப்பாக கொண்டு செல்வது வழக்கம். ஆனால் வெளியேறியது ரசிகர்களுக்கு சற்றே வருத்தம் அளிக்கும் விஷயமாகவே இருக்கிறது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி இது […]

You May Like