ஏர்டெல் நிறுவனம் குறைந்தபட்ச மாதாந்திர ப்ரீபெய்டு ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது..
இந்தியாவில் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திரம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அவுட்கோயிங் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்… மேலும் பேலன்ஸ் இருந்தால் தான் இன்கமிங் கால்களும் வரும்.. எனவே பயனர்கள் ஒவ்வொரு மாதமும் கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.. ரீசார்ஜ் கட்டணம் ஒவ்வொரு தொலைதொர்பு நிறுவனத்திற்கு ஏற்ப மாறுபடும்..
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஏர்டெல் நிறுவனம் குறைந்தபட்ச ப்ரீபெய்டு கட்டணத்தை உயர்த்தி உள்ளது.. ரூ.99-ஆக இருந்த குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணத்தை அந்நிறுவனம் தற்போது ரூ.155-ஆக உயர்த்தி உள்ளது.. இது முன்பு இருந்ததை விட 57% அதிகமாகும்.. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரூ.155 ரீசார்ஜ் திட்டத்தில் 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 300 எஸ்.எம்.எஸ் ஆகியவை கிடைக்கும் என்றும், இது 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம் என்றும் தெரிவிக்கப்பட்டுளது.. ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் ரீசார்ஜ் கட்டணங்களின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது..