கூகுள் நிறுவவத்தின் ஆட்குறைப்பு அறிவிப்பை தொடர்ந்து பல உயரதிகாரிகளின் சம்பளம் குறைப்பட உள்ளதாக சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்..
கடந்த சில மாதங்களாக கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. சமீபத்திய ஆட்குறைப்பு நடவடிக்கைகள் உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.. குறிப்பாக கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்களில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 200,000 ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கூகுள் நிறுவனம் சமீபத்தில் 12,000 பேரை பணிநீக்கம் செய்தது.. சுமார் 6% பணியாளர்களை குறைத்தது.. இந்நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு சம்பளம் குறைக்கப்பட உள்ளதாக அந்நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.. சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய சுந்தர் பிச்சை, “மூத்த துணைத் தலைவர்” நிலைக்கு மேலே உள்ள அனைத்துப் பதவிகளில் உள்ளவர்களின் வருடாந்திர போனஸில் குறிப்பிடத்தக்க குறைவு இருக்கும்.. இந்த நடவடிக்கை நிறுவனத்தின் செயல்திறனுடன் இந்த இழப்பீடு இணைக்கப்பட்டுள்ளது..” என்று குறிப்பிட்டார்..
சம்பள குறைப்பை பற்றி சுந்தர் பிச்சை தெளிவாகப் பேசவில்லை என்றாலும், அதனை மறைமுகமாக அவர் தெரிவித்துள்ளார்.. மேலும், எவ்வளவு சம்பளம் குறைக்கப்படும், எப்போது குறைக்கப்படும் என்பது குறித்து சுந்தர் பிச்சை எந்த தகவலையும் குறிப்பிடவில்லை.. இந்த அறிவிப்பு கூகுள் ஊழியர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. இதனால் சுந்தர் பிச்சை உட்பட பலருக்கும் சம்பளம் குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது..
கூகுள் நிறுவனம் ஆட்குறைப்பு அறிவிப்பை வெளியிடுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு சுந்தர் பிச்சையின் சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, சுந்தர் பிச்சையின் ஆண்டு சம்பளம் $2 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது..