fbpx

அடுத்த அதிர்ச்சி!… கூடுதலாக பல ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய மெட்டா நிறுவனம் திட்டம்?

மெட்டா நிறுவனம், தனது நிறுவனத்தில் கூடுதலாக பல ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியது. இதுவே, சமூக வலைதளங்களான, வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மாதிரியான தளங்களுக்கு தாய் நிறுவனம். இதன் தலைவராக மார்க் ஜூக்கர்பெர்க் (mark zuckerberg) இருந்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவைத் தொடர்ந்து, பெரு நிறுவனங்களும், தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. கூகுள், அமேசான், டிவிட்டர் உள்பட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களில் பல ஆயிரம்பேரை பணி நிக்கம் செய்த நிலையில், உலகின் மிகப்பெரிய சமூக வலைதள நிறுவனமான மெட்டா, இந்த வரிசையில் ஏற்கனவே இணைந்துள்ள மெட்டா நிறுவனம் சுமார் 11,000 ஊழியர்களைக் கடந்த நவம்பர் மாதம் அதிரடியாக பணிநீக்கம் செய்தது.

தற்போது மீண்டும் பல ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மெட்டா ஊழியர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பொருளாதார நெருக்கடி காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறியுள்ளனர்.மெட்டா நிறுவனம் தற்போது அவர்களின் மெய்நிகர் கருவியான மெட்டாவேர்ஸ் மேல் கவனம் செலுத்திவருகின்றனர். இதனால் அவர்களுக்குத் தேவையான ஊழியர்கள் மட்டும் வைத்துக்கொண்டு இதர ஊழியர்களை பணிநீக்கம் செய்ய நிறுவன இயக்குநர்களுக்கு மெட்டா நிறுவன தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Kokila

Next Post

இந்தியாவின் இந்த மாநிலத்தில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே உள்ளது.. பலருக்கும் தெரியாத தகவல்...

Wed Mar 8 , 2023
இந்திய ரயில்வே நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது.. ஏனெனில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் உள்ளது.. அதாவது சுமார் 8,000 ரயில் நிலையங்கள் உள்ளன. பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கில் ரயில் நிலையங்கள் உள்ளன.. ஆனால் இந்தியாவில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே உள்ள மாநிலம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. ஆம்.. மிசோரம் மாநிலத்தில் […]

You May Like