fbpx

அடுத்த டார்கெட் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! கைதாக வாய்ப்பு..!! பரபரப்பை கிளப்பிய அமைச்சர்..!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நவம்பர் 2ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்படலாம் என டெல்லி அமைச்சர் அதிஷி அச்சம் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் ஆளும் அரசு கடைபிடித்த மதுபான கொள்கையில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாகவும், சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாகவும் மொத்தம் 15 பேர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நவம்பர் 2ஆம் தேதியன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த சம்மன் டெல்லி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக டெல்லி அமைச்சர் அதிஷி செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை பொய் வழக்கில் சிக்க வைக்க முயற்சிக்கிறது அமலாக்கத்துறை.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களை சிறைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது பாஜக. இதனால்தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல்களில் கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாத பாஜக இப்படியான குறுக்கு வழிகளை கையில் எடுக்கிறது.

எங்களுக்கு கிடைத்த தகவல்களின் படி நவம்பர் 2-ம் தேதி அமலாக்கத்துறை விசாரணைக்கு கெஜ்ரிவால் ஆஜராகும் போது அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். மதுபான கொள்கை வழக்கில் அவரை கைது செய்ய முடியாது. ஆனால், பாஜகவை எதிர்த்து பேசுவதாலேயே அவரை கைது செய்கிறது” என்றார்.

மேலும், “அரவிந்த் கெஜ்ரிவாலை தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கும் குறிவைத்திருக்கலாம். பின்னர் பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவை கைது செய்யலாம். பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- ஆர்ஜேடி கூட்டணியை உடைக்க முடியாத விரக்தியில் இந்த நடவடிக்கையை பாஜக மேற்கொள்ளக் கூடும். அதன்பின்னர் கேரளா முதல்வர் பினராயி விஜயன், அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிவைக்கப்படலாம்” என்று கூறினார்.

Chella

Next Post

நிக்சனுடன் காதல்..!! கடுப்பில் மகளுக்கான ஆதரவை நிறுத்திய ஐஷூவின் பெற்றோர்..!! நடந்தது என்ன..?

Tue Oct 31 , 2023
பிக்பாஸ் சீசன் 7இல் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள 18 பேரில் ஐஷூவும் ஒருவர். இவர் ஊட்டியை சேர்ந்தவராவார். இவரது பெற்றோர் ஊட்டியில் ஏடிஎஸ் என்கிற புகழ்பெற்ற டான்ஸ் ஸ்கூல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த பள்ளியில் பயிலும் மாணவர்கள் விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று அசத்தி வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட அமீரும், ஐஷூவும் உறவினர்கள் தான். ஐஷூவின் […]

You May Like