fbpx

சற்றுமுன்…! கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு…!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 18 மற்றும் 19-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதில் உடல் நிலை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்று வரை மொத்தம் 211 பேர் அனுமதிக்கப்பட்டனர். இது வரை 4 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தம் சிகிச்சை பெற்று வரும் நபர்கள் எண்ணிக்கை

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 106 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 30 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் என 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு வெண்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

English Summary

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்வு

Vignesh

Next Post

கோபா அமெரிக்கா 2024 | 2-1 என்ற கணக்கில் ஈக்வடாரை வீழ்த்தியது வெனிசுலா!!

Sun Jun 23 , 2024
Venezuela head coach Fernando Batista made two changes at the break, bringing on game-winners Cadiz and Bello and both were to make a decisive impact.

You May Like