fbpx

சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்தது..!! இன்று மேலும் 49 பேர் சஸ்பெண்ட்..!!

நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி எழுப்பிய 30 எம்.பி.க்கள் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தமிழச்சி தங்கபாண்டியன், சி.என்.அண்ணாதுரை, செல்வம் உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட 31 எம்.பி.க்கள் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். எம்பிக்களின் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவம் தொடர்பாக விவாதம் நடத்தக் கோரி கடந்த வாரம் மக்களவையில் போராட்டம் நடத்தியதால் திமுக எம்பி கனிமொழி, மார்க்சிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட 13 எம்.பி.க்களும் மாநிலங்களவையில் டெரிக் ஓ பிரையனும் உள்ளிட்ட 14 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று மேலும் 49 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டை சேர்ந்த திருமாவளவன், கார்த்திக் சிதம்பரம், ஜெகத்ரட்சகன், தனுஷ் குமார் மற்றும் பரூக் அப்துல்லா, சுப்ரியா சுலே, சசி தரூர், மணீஷ் திவாரி உள்ளிட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் நடந்த தாக்குதலுக்கு விளக்கம் கேட்டு போராடி வரும் நிலையில், சஸ்பெண் செய்யப்பட்ட எம்பிக்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

Chella

Next Post

81 கோடி இந்தியர்களின் தகவல்கள் விற்பனைக்கு.! பாகிஸ்தான் மற்றும் FBI-யிடமும் கைவரிசை.! அதிர்ச்சியில் சிபிஐ அதிகாரிகள்.!

Tue Dec 19 , 2023
81 கோடி இந்திய மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக நான்கு பேரை கைது செய்திருக்கும் சிபிஐ அதிகாரிகள் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் இந்தியர்களின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டு குறித்த தனிப்பட்ட தகவல்கள் டார்க் வெப் இணையதளத்தில் விற்பனைக்கு வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த புலனாய்வுத் துறையினர் இது தொடர்பாக தீவிர விசாரணையில் இறங்கினர். […]

You May Like