பாலியல் சுகத்திற்காக தனது அந்தரங்க பகுதியில் வெடிகுண்டை சொருகிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் டூலோன் நகரில் உள்ள செயிண்ட் மூஸ்ஸே மருத்துவமனைக்கு 88 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வலி தாங்க முடியாமல் வந்துள்ளார். வலியால் துடித்த அவரிடம் மருத்துவர்கள் காரணத்தை கேட்டபோது தனது அந்தரங்க பகுதியில் வெடிகுண்டு சிக்கியிருப்பதாக கூறியுள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட முதியவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையை தொடங்கினர். அப்போது, அவரது பின்புறத்தில் 20 செமீ நீளமும் 2 அங்குல அகலமும் கொண்ட வெடிகுண்டை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
அதில், முதியவரின் அந்தரங்க பகுதியில் இருந்தது முதல் உலகப்போரை சேர்ந்த வெடிகுண்டு என்பதால் முதியவரின் உடலில் வெடிக்காது என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், முதியவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், குணமடைந்து வருவதாகவும் பாலியல் சுகத்திற்காக அந்த முதியவர் தனது பின்புறத்தில், வெடிகுண்டை திணித்து உள்ளதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.