பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நாடு முழுவதும் பல மாநில அரசு ஆலோசித்து வருகிறது. . நாட்டின் பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய முறை அமலில் உள்ளது. இதனால் பல மாநிலங்களில் இன்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் இந்த மாதம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயன்பெறும் வகையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று சமிபத்தில் கூறியிருந்தார். அதேபோல 2022 பட்ஜெட்டில், அடுத்த நிதியாண்டில் பழைய ஓய்வூதியத்தை மீண்டும் தொடங்கும் என ராஜஸ்தான் அரசு அறிவித்தது. இதனுடன் சத்தீஸ்கரிலும் மாநில அரசு அமல்படுத்த உள்ளது.
2004-ம் ஆண்டு மத்திய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் முன்வைத்து வருகின்றனர். ஆனால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கூட மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திய மாநிலங்கள் தேசிய பென்சன் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தேசிய பென்ஷன் நிதியை வழங்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் அதற்கு தேசிய பென்ஷன் ஆணையம் மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறியது. மத்திய அரசு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளது பெரும் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது.