ஜோசபின் மைச்சலுக் என்ற 80 வயது மூதாட்டி, 203 யூனிட் இரத்தம் கொடுத்து அதிக ரத்த தானம் செய்தவர் (பெண்) என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஒருவர் மற்றொருவருக்குக் கொடுக்கக்கூடிய மிக விலையுயர்ந்த பரிசு உயிர்க்கொடை, அதாவது இரத்தம். ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல், நன்கொடையாளர்களுக்கும் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகள் உள்ளன, ஆனால் பலர் இன்னும் இந்த செயல்முறையில் சந்தேகம் கொண்டுள்ளனர். கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, ஜோசபின் மைச்சலுக் தனது வாழ்நாள் முழுவதும் 203 யூனிட் இரத்தத்தை தானம் செய்து, எண்ணற்ற மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அவர் 1965 ஆம் ஆண்டு தனது 22வது வயதில் தொடங்கி, கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாக தொடர்ந்து இரத்த தானம் செய்து வருகிறார். குறிப்பிடத்தக்க வகையில், ஒரு யூனிட் இரத்தம் தோராயமாக ஒரு அமெரிக்க பைண்டிற்கு (473 மிலி) சமம், ஆக மொத்தம், அவர் 96,019 மில்லி (96 லிட்டர்) தானம் செய்துள்ளார்.
இந்தியாவின் மதுராவைச் சேர்ந்த அசோக் குமார் என்பவர், அதிக இரத்த தானம் செய்ததது சாதனையாக இருந்தது. அவர் தனது வாழ்நாளில் 117 யூனிட்களை வழங்கியுள்ளார். தற்போது அவரது சாதனையை ஜோசபின் முறியடித்துள்ளார். இதுக்குறித்து ஜோசபின் கூறுகையில், பலர் ரத்தப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறார்கள். கர்ப்பம், பிரசவம், விபத்து, அறுவை சிகிச்சை போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் பலருக்கு ரத்தம் மிகவும் அவசியம். ஆனால் இன்று ரத்தம் தேவைப்படுகிற அனைவருக்கும் கிடைப்பதில்லை. இரத்தம் கொடுப்பதற்கு என்னுள் இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் O+ve ரத்தப்பிரிவை சேர்ந்தவர். O+ve என்பது பொதுவாக உலகெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் எப்போதும் அதிக தேவை உள்ள இரத்தக் குழுவாகும். ஏனெனில் இது மிகவும் பொதுவான வகை. அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்தின் கூற்றுப்படி, அமெரிக்க மக்கள் தொகையில் 37% பேர் மட்டுமே O+ இரத்த வகையைக் கொண்டுள்ளனர்.