fbpx

’கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மூதாட்டி அடித்துக் கொலை..!! மகன் செய்த கொடூர சம்பவத்தின் பின்னணி..!!

விஜய்சேதுபதி நடித்த ‘கடைசி விவசாயி’ படத்தில் அவருக்கு அத்தை கதாபாத்திரத்தில் நடித்தவர் காசம்மாள் (71). மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அருகே ஆனையூரைச் சேர்ந்த இவருக்கு நமகோடி (52), தனிக்கொடி என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் நமகோடி மதுவுக்கு அடிமையானவர். இவரது மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், நமகோடி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். ஆனால், அடிக்கடி மது வாங்க பணம் கேட்டு தாயை தொல்லை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்றுதூங்கிக்கொண்டிருந்த தாயை எழுப்பி, மது குடிக்க பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளார். அவருக்கு காசம்மாள் பணம் தர மறுத்ததைத் தொடர்ந்து, நமகோடி ஆத்திரத்தில் கட்டை ஒன்றால் தாய் என்றும் பாராமல் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காசம்மாள், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காசம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவான மகன் நமகோடியையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

"வினையான கிரிக்கெட் விளையாட்டு.." கற்களால் அடித்து கொலை செய்யப்பட்ட 24 வயது இளைஞர்.!

Mon Feb 5 , 2024
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறு 24 வயது இளைஞர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 3 நபர்கள் மீது வழக்குப்பதிவு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உத்திர பிரதேச மாநிலத்தின் மீரட் பகுதியைச் சேர்ந்தவர் சுமித். 24 வயதான இவர் நேற்று நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்றிருக்கிறார். இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டின் போது நண்பர்களிடையே தகராறு […]

You May Like