டெல்லியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் அதானி விவகாரம், சம்பல் வன்முறை உள்ளிட்டவை காரணமாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. அதேநேரம் இந்த குளிர்கால கூட்டத்தொடரிலேயே மத்திய அரசு பல்வேறு முக்கிய மசோதாக்களை அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை இந்த கூட்டத்தொடரிலேயே அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. லோக்சபா மற்றும் அனைத்து மாநிலச் சட்டசபைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்திருந்தது.
இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நடப்பு கூட்டத்தொடரிலேயே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Read More : அரசுக்கு சொந்தமான ஓட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்..!! ஆடிப்போன அமைச்சர்..!! கடைசியில் நடந்த ட்விஸ்ட்..!!