fbpx

பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் செல்லும் ஒரே நபர்..! புதிய மன்னர் சார்லஸ் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள்..

பிரிட்டனில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணியான இரண்டாம் எலிசபெத், தனது 96வது வயதில் நேற்று காலமானார். இதை தொடர்ந்து எலிசபெத்தின் மூத்த மகன், சார்லஸ் பிரிட்டனின் புதிய மன்னராக பொறுப்பேற்றுள்ளார்.. சார்லஸின் இரண்டாவது மனைவி கமிலா பார்க்கர் அடுத்த மகாராணியாக உள்ளார்..

பிரிட்டனில் பாஸ்போர்ட் இல்லாமல் விமானத்தில் செல்லலாம்.. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் ஒரே நபர் மன்னர் சார்லஸ் மட்டுமே. ஏனென்றால், அனைத்து ஆவணங்களும் இனி மன்னர் பெயரில் வழங்கப்படும். இருப்பினும், அவரது குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுக்கு சரியான ஆவணங்கள் தேவைப்படும். இது தொடர்பான அரசியலமைப்பின் முகப்புரையில் சிறிது மாற்றம் செய்யப்படும்..

சார்லஸின் தாய் ராணி எலிசபெத்தைப் போலவே, அவருக்கும் இரண்டு பிறந்தநாள்கள் இருக்கும். மறைந்த ராணியின் பிறந்த நாள் ஏப்ரல் 21 அன்று, ஆனால் அதிகாரப்பூர்வ கொண்டாட்டம் ஜூன் இரண்டாவது செவ்வாய் அன்று நடைபெறும். ஏனென்றால், அவரது மரியாதை அணிவகுப்புகளுக்கு சாதகமான வானிலையை அதிகாரிகள் விரும்பினர். சார்லஸின் பிறந்த நாள் நவம்பர் 14 ஆம் தேதி என்பதால், அவரது அதிகாரப்பூர்வ பிறந்த நாள் வெப்பமான மாதத்திற்கு மாற்றப்படலாம்.

charles

சார்லஸ் எந்த தேர்தலிலும் வாக்களிக்கவோ போட்டியிடவோ மாட்டார். அவர் மன்னர் என்பதால், உள்நாட்டு அரசியலில் நடுநிலை வகிக்க வேண்டும். எவ்வாறாயினும், அவர் பிரதமருடன் வாரந்தோறும் சந்திப்புகளை நடத்துவார், அவர் அரசாங்க விவகாரங்கள் குறித்த கணக்குகளை மன்னரிடம் வழங்க வேண்டும்.. சுவாரஸ்யமாக, இங்கிலாந்து முழுவதும் திறந்த நீரில் உள்ள அனைத்து அன்னப்பறவைகளையும் சார்லஸ் வைத்திருப்பார். இது 12-ம் நூற்றாண்டு பாரம்பரியம் ஆகும்..

Maha

Next Post

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..! தக்காளி விலை அதிரடி குறைவு..! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Fri Sep 9 , 2022
கோயம்பேடு மொத்த காய்கறிச் சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ளது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. தொடா் மழையால் தக்காளி வரத்து குறைந்த நிலையில், மழை காரணமாகவும், மூகூா்த்த நாள்களின் தேவை அதிகரிப்பு காரணமாகவும் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென உயா்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கிலோ தக்காளி ரூ. 60 வரை அதிகபட்சமாக விற்பனையானது. இந்நிலையில், இன்று தக்காளி வரத்து மீண்டும் அதிகரித்து சென்னை கோயம்பேடு […]

You May Like