fbpx

அடேங்கப்பா..!! 200 பில்லியன் டாலர்களை இழந்த ஒரே நபர்..!! எலான் மஸ்க்கின் புதிய சாதனை..!!

எலான் மஸ்க் தனது நிகர சொத்து மதிப்பில் 200 பில்லியன் டாலர்களை இழந்த முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்று அறியப்பட்ட எலான் மஸ்க், தனது மொத்த சொத்து மதிப்பில் இருந்து சுமார் 200 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. 51 வயதான எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கடந்த 2021 நவம்பரில் 340 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்தது. மேலும், இந்த மாத தொடக்கத்தில் லூயிஸ் வுட்டன் தலைமை நிறுவனரான பெர்னார்ட் அர்னால்ட், மஸ்க்கின் சொத்துமதிப்பை விட அதிகம் பெற்று 171 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார்.

அடேங்கப்பா..!! 200 பில்லியன் டாலர்களை இழந்த ஒரே நபர்..!! எலான் மஸ்க்கின் புதிய சாதனை..!!

இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் 4,400 கோடி டாலருக்கு வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் பெரும் பங்குகளை சந்தையில் விற்பனை செய்தார். இதனால் எலான் மஸ்கிற்கு அவரின் சொத்து மதிப்பில் பெரும்பகுதி குறைந்தது. தற்போது 137 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர்கள் இழந்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Chella

Next Post

மாணவிகளிடம் சில்மிஷம்! ராமநாதபுரம் அருகே 2 ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது!

Sat Dec 31 , 2022
பெண்கள் சுதந்திரத்தை பற்றி வாய் கிழிய பேசும் இந்த தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறுவதை இன்றளவும் யாராலும் தடுக்க முடியவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கிறது. பெண்கள் முன்னேற வேண்டும், அவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும், பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் என்று தான் அவர்களுக்கு பல்வேறு உதவிகளை அரசு சார்பாக செய்து தரப்பட்டு வருகிறது. ஆனால் பெண்கள் படித்து முடித்து நல்ல மதிப்பெண்கள் வாங்கி வேலைக்கு சென்றால் […]

You May Like