fbpx

மகனை காணாததால் துடிதுடித்த பெற்றோர்..!! பெண் சாமியாரை விட்டு பிரிய மறுத்ததால் பரபரப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜா கடை பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி. இவருடைய மகன் பார்த்திபன் (21). இவர், ஓமலுாரில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பார்த்திபனிடம் இருந்து எந்தவொரு தகவலும் வராததால், தந்தை குப்புசாமி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, மகனை பல இடங்களில் தேடி பார்த்துள்ளார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில், போச்சம்பள்ளி அடுத்த காட்டாகரம் ஓம் சக்தி கோவிலில் பெண் சாமியார் கீதாவுக்கு பணிவிடை செய்து வந்துள்ளார் பார்த்திபன். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை குப்புசாமி தன் மகனை விடுவிக்குமாறு பெண் சாமியார் கீதாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், கீதாவிடம் இருந்து பிரிய மனம் இல்லாமல், தனது தந்தையுடன் செல்ல மறுத்துவிட்டார்.

இதனால் மனம் உடைந்து போன குப்புசாமி காவல் நிலையத்தில் தனது மகனை மீட்டுக் கொடுக்கும்படி புகார் அளித்தார். இதனை அடுத்து அங்கு சென்ற போச்சம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் குமார் தலைமையிலான காவலர்கள், பார்த்திபனை மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது அவர்களுடன் பெண் சாமியார் கீதா மற்றும் காட்டகரம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் உள்ளிட்டோரும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். குப்புசாமி, சாந்துார் கிராமத்தைச் சேர்ந்த பாமக பிரமுகர் பூபாலனை தன்னுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது பூபாலன் பெண் சாமியார் கீதாவிடம் மகனை பெற்றோருடன் ஒப்படைத்து விட வேண்டியதுதானே என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கீதா, பூபாலனை தாக்கியுள்ளார். இதை பார்த்த போச்சம்பள்ளி காவல் உதவி ஆய்வாளர் குமார் தடுக்க முயன்றுள்ளார். அப்போது பெண் சாமியார் கீதாவுடன் வந்த வேல்முருகன் உதவி ஆய்வாளர் குமாரை சட்டையை பிடித்து தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், பெண் சாமியார் கீதா மற்றும் வேல்முருகனை கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கொண்டு செல்வதற்காக ஜீப்பில் ஏற்றியுள்ளனர். அப்போது அங்கு தனது படையுடன் வந்த இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை மாநில செயலாளர் அசோக் ஜீ போலீஸ் ஜீப்பை எடுக்கவிடாமல் அடாவடி செய்தார்.

போலீசார் அவரிடம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காத அசோக், என்னை ஜீப்பை விட்டு ஏற்றி விட்டு கூட்டுட்டி போ என ஒருமையில் போலீசாரை வசைப்பாடினார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த போலீசார், உன்னால் முடிந்தைதை பார்த்துக் கொள் என்று கூறி விட்டு பெண் சாமியார் கீதாவையும், சீடர் வேல்முருகனையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி இளைஞர்களை வழிக்கெடுக்கும் இத்தகைய சாமியார்களை களை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Chella

Next Post

குழந்தை பெற்ற பின் 2 பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்..!! இதுதான் சம்பிரதாயமாம்..!!

Fri Mar 10 , 2023
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் பல்வேறு வகையான சம்பிரதாயங்கள் நடைமுறையில் உள்ளன. ஒரு சில கிராமங்களில் திருமணத்திற்கு முன் ஆண், பெண் ஆகியோர் இணைந்து வாழ்ந்து குழந்தை பெற்ற பிறகே திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆனால், ஒரு வாலிபர் 2 பெண்களை ஒரே நேரத்தில் காதலித்து, அவர்களுடன் இணைந்து வாழ்ந்து, இரண்டு பேருக்கும் ஒரு குழந்தை பிறந்த பின் இரண்டு பேரையும் […]
குழந்தை பெற்ற பின் 2 பெண்களை திருமணம் செய்து கொண்ட இளைஞர்..!! இதுதான் சம்பிரதாயமாம்..!!

You May Like