fbpx

’அட்ஜஸ்ட்மெண்ட் கேட்ட நபர்’..!! ’இப்போ எங்க இருக்கேன் பாத்தியா’..? சரியான பதிலடி கொடுத்த பிரபல சீரியல் நடிகை ப்ரீத்தி..!!

வெள்ளித்திரையை விட சின்னத்திரைதான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அதுவும் குடும்ப பெண்களை எப்போதுமே கவரும் வகையில் புதுப்புது சம்பவங்களை சீரியல்களிலும் புகுத்தி அந்த வகையில் ஒரு கியூரியாசிட்டியை ஏற்படுத்தி நாள்தோறும் சின்னத்திரை தொடர்களை பார்க்க வைப்பதில் பல சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு பிரபலமான தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதில் ஹீரோ ஹீரோயினை விட பெருமளவு பேசப்படும் கதாபாத்திரமாக இருப்பவர் ஸ்ருதி என்ற கேரக்டரில் நடிக்கும் ப்ரீத்தி.

அவருக்கு என ஒரு தனி ஃபேன் பாலோயர்ஸ்கள் இருக்கின்றனர். அவர் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சீரியலுக்குள் நான் வருவதற்கு என்னென்ன கஷ்டங்களை சந்தித்தேன் என்பதை பற்றி கூறியிருக்கிறார். எப்பவும் போல ஒரு குடும்பத்தில் இருந்து ஒரு பெண் சினிமாவிற்கு நடிக்க வேண்டும் என விருப்பப்படும்போது ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்கள் மாதிரியே ப்ரீத்தி வீட்டிலும் எதிர்ப்புதான் இருந்துள்ளது. இருந்தாலும் மகள் ஏதோ செய்கிறாள் என விட்டு விட்டார்களாம். யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் பல ஆடிசன்களை கடந்து கடைசியில் இந்த வாய்ப்பு வந்ததாக ப்ரீத்தி அந்த பேட்டியில் கூறினார்.

அதைப்போல சினிமாவில் நடிக்க வரும் புதுமுக நடிகைகள் சந்திக்கும் ஒரு பிரச்சனையாக இருப்பது அட்ஜஸ்ட்மென்ட். ஆரம்பத்தில் எனக்கும் ஒருத்தர் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேட்டார். நான் முடியாது என சொல்லிவிட்டேன். ஆனால், அதற்கு அந்த நபர் அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் இந்த சினிமாவில் நீ என்னத்த கிழிக்க போற என படுமோசமாக பேசியுள்ளார். இதைப் பற்றி பேசும்போது பிரீத்தியை பேட்டி எடுத்த தொகுப்பாளினி ஒருவர் அப்படி கேட்ட அந்த நபருக்கு நீங்கள் இப்பொழுது என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என கேட்டார். இதற்கு பதில் அளித்த பிரீத்தி எப்படி வந்து உட்கார்ந்து இருக்கிறேன் பாருங்கள். இது தான் அவருக்கு நான் கொடுக்கும் பதிலடி.

அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் எப்படி சினிமாவில் வர முடியும் என அன்று என்னைக் கேட்டார். ஆனால், அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமலும் சினிமாவில் சாதிக்க முடியும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம். எனினும் அந்த நபர் சோசியல் மீடியாக்களில் என்னை பாலோ செய்து கொண்டு வருகிறார். இப்போது தெரிந்திருக்கும் என்னை பற்றி. இதுதான் நான் அவருக்கு கொடுக்கும் பதிலடி. இருந்தாலும் அந்த நபரை நான் பிளாக் செய்து விட்டேன் என கூறினார்.

Read More : ராஜினாமா செய்தார் மோடி..!! குடியரசுத் தலைவருக்கு கடிதம்..!! 8ஆம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்பு..!!

English Summary

Adjustment is one of the problems faced by new actresses coming to the cinema. Initially someone asked me about the adjustment. I said no.

Chella

Next Post

ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்பவரா நீங்கள்..? இதை செய்தாலே போதும் நோய்களை தவிர்க்கலாம்..!!

Wed Jun 5 , 2024
In today's time, the environment of sitting and working for a long time has increased. Doctors warn that many health problems are caused due to this type of work.

You May Like