fbpx

1992இல் அறிவித்த உறுதிமொழி..!! பிரதமரின் 30 ஆண்டுகால கனவு..!! முதல் நபராக ராமர் கோயிலில் தரிசனம்..!!

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெறும் நாள் நெருங்கி வரும் நிலையில், லட்சக்கணக்கான ராமர் பக்தர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது. அதேபோல பிரதமர் மோடி 30 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த உறுதிமொழியும் நிறைவேறப் போகிறது.

1992ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பிரதமர் மோடி, அயோத்தியில் ஒருநாள் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்படும் என்று உறுதிமொழி எடுத்தார். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, பாபரின் தளபதி மிர் பாக்கி, ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து பாபர் மசூதியைக் கட்டினார். இந்துத்துவ அமைப்புகள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பற்றி வந்தனர்.

1990-களில் ராமர் கோவில் இயக்கத்தை பாஜக தீவிரப்படுத்தியது. அப்போது, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தலைமையில் சோம்நாத்தில் இருந்து புறப்பட்ட ரத யாத்திரையின் முக்கிய ஒருங்கிணைப்பாளராக மோடி இருந்தார். டிசம்பர் 11, 1991இல் கன்னியாகுமரியில் இருந்து பாஜக தொடங்கிய பிரச்சாரப் பயணம் ஜனவரி 14, 92இல் அயோத்தியை அடைந்தது. இந்தப் பிரச்சாரப் பயணத்தில் மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் அப்போது குஜராத் பாஜகவின் பொதுச்செயலாளராக இருந்த மோடியும் கலந்துகொண்டார்.

அப்போதுதான், ராமர் கோயில் கட்டப்படும் என்று பிரதமர் மோடி உறுதிமொழி எடுத்ததாக அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக நீட்டித்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்து, கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கோவில் கட்டும் பணியின் தொடக்க விழாவிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார். தற்போது முதல் நபராக கும்பாபிஷேக தினத்தன்று பிரதமர் மோடி அயோத்திர ராமர் கோயிலில் தரிசனம் செய்யவுள்ளார். கும்பாபிஷேக விழாவின் யாகத்துடன் அவரது 30 ஆண்டுகால உறுதிமொழியும் நிறைவேறிவிடும்.

Chella

Next Post

தனது கட்சியுடன் காங்கிரஸில் இணைந்தார் முதல்வரின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா..!!

Thu Jan 4 , 2024
ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் நிறுவனத் தலைவரும், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா என்ற கட்சியை நடத்தி வருபவர் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா. இவர் தனது கட்சியை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியுடன் இணைக்கப்போவதாக சமீப காலங்களில் செய்திகள் வெளியாகி வந்தது. இதற்கிடையே, கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி […]

You May Like