fbpx

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்ய வேண்டும்…! அரசு அதிரடி உத்தரவு…!

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRB நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்; 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும்; 3, 188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.12,000  தொகுப்பூதிய அடிப்படையிலும் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சிப் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

மேலும் இல்லம் தேடி கல்வி’ திட்டத் தன்னார்வலர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் அடங்கிய குழுவினர் தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை கூறி இருந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Also Read: செம தகவல்…! விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவற்றின் திருத்தப்பட்ட திட்டம்…! மத்திய அரசு அறிவிப்பு

Vignesh

Next Post

இலங்கையில் வெடிக்கும் மக்கள் போராட்டம்... தேவைபட்டால் இந்தியா ராணுவ உதவி வழங்க வேண்டும்...! சுப்பிரமணியன் சுவாமி

Tue Jul 12 , 2022
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பிலுள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். சில போராட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர், […]

You May Like