fbpx

பெற்றோரின் புகாரை ஏற்காத காவல்துறை..! 13 வயது சிறுமிக்கு கரும்புக்காட்டில் அரங்கேறிய கொடூரம்…!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் 13 வயது சிறுமி கரும்புக்காட்டில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

உத்திர பிரதேச மாநிலம் இலக்கம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி சம்பவம் நடந்த தினத்தன்று பள்ளி சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு நேரமாகியும் சிறுமி வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். எனினும் காவல்துறையினர் அந்த புகாரை ஏற்கவில்லை.

இந்நிலையில் மறுநாள் காலை அங்குள்ள கரும்புத் தோட்டம் ஒன்றில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் சிறுமியின் கண்களும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு உரைத்த காவல்துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் காவல் துறையை குறை கூறியுள்ளனர். காவல்துறை முதலிலேயே நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியின் உயிரை காப்பாற்றி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவல்துறை சிறுமி கொடுமைப்படுத்தப்படும் அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். எனினும் பிற விபரங்கள் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகு தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Kathir

Next Post

’விஜயகாந்துக்கு செயற்கை சுவாசமா’..? அவசர அறிக்கை வெளியிட்ட தேமுதிக தலைமை கழகம்..!!

Mon Nov 20 , 2023
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 3-வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மார்பு சளி, இடைவிடாத இருமல் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பல்வேறு உடல் உபாதைகள் இருப்பதன் காரணமாக உடல்நிலை மற்றும் உறுப்புகளின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணிப்பதற்காக ஐசியூவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் நுரையீரல் சளி பாதிப்பை சீர் செய்வதற்கான சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், […]

You May Like