fbpx

காவல்துறை; புகார் கொடுக்க வருபவர்களிடம்… கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகள்… டி.ஜி.பி. சைலேந்திரபாபு..!!

காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் கூறியுள்ளது:-

புகார் கொடுக்க வருபவர்களிடம் காவல் நிலையங்களில் இருப்பவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். புகார் அளிப்பவர்களிடம் சரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும். சில காவல் அதிகாரிகள் எதிர்மறையான சிந்தனையுடன் இருக்கின்றனர். புகார்தாரர்கள் சில சமயங்களில் உயர் அதிகாரிகளை சந்தித்திருந்தால் அதனை அவர்களிடம் சுட்டிக்காட்டி பேசக்கூடாது.

புகார் அளிப்பவர்களிடம் துன்புறுத்தும் வகையில் நடந்து கொள்வது காவல் துறை மீதான நன்மதிப்பை குறைக்கும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். காவல் துறைக்கான அதிகாரம் என்பது ஒரு பொறுப்பு என்பதை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Baskar

Next Post

தினமும் 2.5 ஜிபி டேட்டா.. வருடத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்... ஜியோவின் அசத்தல் திட்டம்..

Sat Sep 10 , 2022
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2,999 ரூ. வருடாந்திர செல்லுபடியாகும் மற்றொரு புதிய ரீசார்ஜ் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்தது. இந்த ரீசார்ஜ் திட்டத்தை செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11 வரை ஆறு நாட்களுக்கு மட்டுமே வாங்க முடியும்.. இந்தத் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் ஒரு நாளைக்கு 2.5 […]

You May Like