திருப்பத்தூர் மாவட்ட பகுதியை சேர்ந்த பாலு மற்றும் தேனி மாவட்ட பகுதியைச் சேர்ந்த தமிழரசி என்பவர் இருவரும் சிறு வயதிலிருந்தே கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள். இருவரும் படித்து பட்டம் பெற்றவர்கள்.
இவர்கள் பல நாட்களாக காதலித்து வந்ததை தொடர்ந்து போதிய பொருளாதார வசதி இல்லாமையால் திருமணம் செய்வதில் இடர்பாடு இருந்து வந்துள்ளது.
இந்த செய்தியை அறிந்த அந்த பகுதி காவல்துறையினர் அருகில் உள்ள முருகன் கோவில் இவர்களின் திருமணத்தை செய்ய ஏற்பாடு செய்தார். மேலும் இன்று காலை கோவிலில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.
தம்பதிக்கு ரூபாய் ஒரு லட்சத்து இருபத்தைந்து ஆயிரம், சீர்வரிசைகள் என காவல்துறை மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில் தம்பதிக்கு வழங்கியுள்ளது. திருமண விழாவில் காவல்துறையினர், பார்வைத்திறன் குறைபாடு கொண்ட உறவுகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.