fbpx

மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவலர்..!! வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான சோகம்..!!

மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட காவலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரு தினங்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவற்றிலும் மழை கொட்டி தீர்த்தது. மழை பாதிப்பால் பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் நிறுத்தப்பட்டது.

அத்தியாவசிய பொருட்களுக்கு மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து, இன்று காலை முதல் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மின் விநியோகமும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவிட்டு, பணி முடிந்து கொளத்தூர் கே7 தலைமை காவலர் ருக்மேநாதன் கொளத்தூர் கே7 தலைமை காவலர் ருக்மேநாதன் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் பரிதாபமாக அடித்துச் செல்லப்பட்டார். அவரின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

ரூ.4,000 கோடி என்ன ஆச்சு..? வேறு எந்தக் காலத்திலும் இது போல் பார்த்ததில்லை..!! எடப்பாடி பழனிசாமி காட்டம்..!!

Tue Dec 5 , 2023
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையின் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், ”அதிமுக ஆட்சியின்போது மழை வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக எடுக்கப்பட்டன. மழை வெள்ளப் பாதிப்புகளை திமுக அரசு திட்டமிட்டப்படி செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சியில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே திட்டமிடப்பட்டது. எப்போது மோட்டார் வாங்கி, எப்போது தண்ணீரை வெளியேற்றுவார்கள். 4,000 கோடி ரூபாயில் […]

You May Like