fbpx

முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி..! உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பு பரபரப்பு தகவல்..!

முதல்வர் முக.ஸ்டாலினை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி ஒட்டிய விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பலர் பின்புலமாக இருப்பதாக தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை பகுதியில் கடந்த 11ஆம் தேதி முதல்வர் முக.ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில், சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி மண்ணடியைச் சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

முதல்வரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டி..! உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பு பரபரப்பு தகவல்..!

இந்த மனு நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் வினோத் ராஜ் ஆஜராகி இந்த புகாரில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்தான் இந்த சுவரொட்டிகளுக்கு நிதி உதவி செய்ததாக ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், மேலும் இந்த விவகாரத்தில் பின்புலமாக உள்ளவர்கள் மற்றும் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை மனுதாரர்களை கைது செய்யக்கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Chella

Next Post

#Tngovt: இன்று காலை முதல் வேலைவாய்ப்பு முகாம்...! மாணவர்களே வாய்ப்பை மிஸ் பண்ண வேண்டாம்...!

Sat Sep 24 , 2022
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் இன்று சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இன்று சைதாப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாமை நடைபெற்ற உள்ளது. இந்த முகாமில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்யவுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலைவாய்பினை அளிக்கக்கூடிய முன்னணி நிறுவனங்களும் பங்கு கொள்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பணிநியமன […]

You May Like