fbpx

அயர்ன் பாக்ஸ் வைத்து சூடு.. உடல் முழுவதும் காயம்.. பணிப்பெண் கொலை வழக்கில் திருப்பம்!! – பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர்

சென்னையில் 15 வயது வீட்டுப் பணிப்பெண்ணை சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில் தொடர்புடைய தம்பதியை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசாரின் கூற்றுப்படி, சிறுமி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்துள்ளனர்.

அந்த சிறுமி தஞ்சாவூரை சேர்ந்தவர். நிஷாத் மற்றும் நசியா தம்பதி வீட்டில் அவர் வேலை பார்த்து வந்துள்ளார். தீபாவளி , பொங்கலுக்கு கூட விடுமுறை தராமல் கொடுமை செய்துள்ளனர். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டில் மகனுக்கு வைத்திருந்த உணவில் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டதாக அந்த சிறுமியை அடித்தே கொலை செய்துள்ளனர்.

தீபாவளியன்று சிறுமியை கொன்று குளியலறையில் போட்டுவிட்டு, துர்நாற்றம் வீசாமல் இருக்க ஊதுபத்தி ஏற்றிவைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறி உள்ளனர். சிறுமியின் உடலை தங்கள் கழிப்பறையில் விட்டுவிட்டு அந்த இரண்டு பேரும் உறவினரின் வீட்டிற்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. வழக்கறிஞர் அளித்த தகவலின் பேரின் போலீசாருக்கு இந்த சம்பவம் குறித்து தெரியவந்தது. தற்போது போஸ்ட்மார்ட்டம் தொடர்பான முடிவுகள் வெளியாகி உள்ளன.

அதில், அந்த சிறுமியிடம் உடல் முழுக்க கடுமையான காயங்கள் இருந்துள்ளன. முதுகில் காயங்கள் இருந்துள்ளன. முதுகிலும், கைகளிலும் அயர்ன் பாக்ஸ் வைத்து தேய்த்த காயங்கள் உள்ளன. உடல் முழுக்க பல இடங்களில் சிக்ரெட் காயங்கள் இருந்துள்ளன. அந்த சிறுமிக்கு உணவு கொடுக்காமல்.. கடுமையாக வேலை வாங்கி கொடுமை செய்துள்ளனர். இரவு நேரத்தில் தூங்க கூட விடாமல் கடுமையாக கொடுமை செய்துள்ளனர். இதனால் அவரின் குடல் வெறுமையாக இருந்துள்ளது.

அவர் உடல் அழுகிப்போய் உள்ளது. பலியான பின் அவர் பாத் ரூமில் வைக்கப்பட்டதால் அவர் உடல் அழுகிப்போய் உள்ளது. அவரின் மரணம் கடுமையான காயங்கள் காரணமாக ஏற்பட்டு உள்ளது. நெஞ்சு மற்றும் வயிற்று பகுதிகளில் ஏற்பட்ட காயங்கள் அவரின் மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அவரின் கால், கைகளில் தசை நார்கள் கிழிந்து உள்ளன . பல நாட்களாக அவர் கொடுமை படுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Read more ; நூறு கோடியை நெருங்கும் அமரன்.. மூன்றாம் நாள் வசூல் மட்டும் இத்தனை கோடியா?

English Summary

The postmortem results of the minor maid’s murder case in Chennai have been released.

Next Post

பச்சை பால் குடிக்கிறீர்களா? பக்க விளைவுகள் ஏற்படும்.. நிபுணர்கள் எச்சரிக்கை!!

Sun Nov 3 , 2024
Drinking milk is considered to be among the best ways to generate more calcium in your body - which helps strengthen your bones and joints.

You May Like