வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகளின் பெயரை, பெண்கள் வைத்துக் கொள்ள அந்நாடு தடை விதித்துள்ளது..
உலக நாடுகளில் இருந்து தனித்திருக்கும் வடகொரியாவில் கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. அங்குள்ள விசித்திரமான சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, மிகவும் ரகசியமான நாடாகவும், உலக நாடுகளிடம் இருந்து ஒதுங்கி தனித்திருக்கும் நாடாகவும் வடகொரியா கருதப்படுகிறது. வடகொரியாவில் ஆபாச படங்கள் பார்ப்பவர்ளுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.. அந்நாட்டில் வெறும் 3 டிவி சேனல்கள் மட்டுமே உள்ளன. அவையும் அரசுக்கு சொந்தமானவை..
அங்கு வசிக்கும் மக்கள் தவறுதலாக, வெளிநாட்டுப் படங்களை பார்த்துவிட்டால் கூட அவர்களுக்கு மரண தண்டனை தான். சமீபத்தில் கூட வடகொரியாவில் வெளிநாட்டு படங்களை பார்த்த 2 இளைஞர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.. அதுமட்டுமல்ல, வடகொரிய மக்கள் தங்கள் சொந்த விருப்பப் படி, சிகை அலங்காரம் செய்து கொண்டாலோ அல்லது நீல நிற ஜீன்ஸ் அணிந்தாலோ அது சட்டப்படி குற்றம். அரசு அறிவித்துள்ள சிகை அலங்காரங்களை மட்டுமே மக்கள் செய்து கொள்ள வேண்டும்.. ஒரு கம்ப்யூட்டர் வாங்க வேண்டும் என்றால் கூட அவர்கள் அரசிடம் அனுமதி பெற வேண்டும்.. இன்னும் பல வித்தியாசமான சட்டங்களும், வழிமுறைகளும் வடகொரியாவில் உள்ளன.
இந்நிலையில் வடகொரியா அரசு புதிய தடையை விதித்துள்ளது.. அந்நாட்டு அதிபர் கிம் ஜான் உன்னின் மகளின் பெயரைக் கொண்ட மக்கள் அந்த பெயரை மாற்றுமாறு அரசு வலியுறுத்தி உள்ளது.. ஜூ ஏ (Ju Ae) என்ற பெயரைக் கொண்ட மக்கள், வேறு ஏதாவது மாற்றும்படி அரசு அறிவித்துள்ளது.. கிம் ஜாங் உன்னின் மகளின் பெயர் ஜூ ஏ என்றும், அவருக்கு சுமார் பத்து வயது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. , ஜூ-ஏ என்ற பெயரை கொண்ட பெண்களின் பிறப்புச் சான்றிதழை மாற்ற அரசு அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன… ஒரு வாரத்திற்குள் அந்த பெயரை கட்டாயம் மாற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது..
வடகொரியாவில் மக்கள் பெயர்களுக்கு தடை விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த காலத்தில், இல் சுங், ஜாங் இல் மற்றும் கிம் ஜாங் உன் போன்ற பெயர்களைக் கொண்டிருந்தவர்கள், தங்கள் பெயர்களை மாற்றும்படி அறிவுறுத்தப்பட்டனர்.
கிம் ஜாங் உன்னின் இரண்டாவது மகள் ஜு ஏ, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தான் முதன்முதலில் பொதுவெளியில் தோன்றினார்.. மேலும் சமீபத்தில் நடந்த நாட்டின் பிரம்மானட ராணுவ அணிவகுப்பில் தனது தந்தையுடன் சேர்ந்து கலந்துகொண்டார்.. கிம் ஜாங் உன்-ன் மூன்று குழந்தைகளில் ஜு-ஏ மட்டுமே பொதுவெளியில் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது..