fbpx

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,520க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்த நிலையில் அமெரிக்காவில் 2 வங்கிகள் திவாலானதை அடுத்து பாதுகாப்பு கருதி, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5,565க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.44,520க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.76.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200க்கு விற்பனையாகிறது.

Maha

Next Post

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு…..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு……!

Thu Mar 30 , 2023
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது கோடை காலத்தில் கூட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவினாலும் விவசாயிகள் சற்று கவலையடைந்துள்ளார்கள். சென்னை வானிலை ஆய்வு மையம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மற்றும் மேற்கு திசை காற்று […]

You May Like