fbpx

அடியாத்தி.. ரூ.60 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் ஷாக்..!!

இந்தியாவை பொறுத்த வரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பாதுகாப்பு கருதில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று (ஜனவரி 17) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7450 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,600க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read more ; புது ரூல்ஸ்.. இந்திய அணிக்கு புதிய சுற்றுப்பயண விதிகளை அமல்படுத்துகிறது BCCI..!!

English Summary

The price of gold is rising drastically.. Do you know what is the price of gold today?

Next Post

நரக வாழ்க்கை எப்படி இருக்கும்..? 3 நிமிடம் அனுபவித்து வந்த நபர் சொன்ன திகிலூட்டும் தகவல்..!!

Fri Jan 17 , 2025
He said he was drowning in cold, dark water. At that time, it was as if there was no emotion.

You May Like