சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கேற்ப, கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தும் குறைந்தும் வந்தது.
இதற்கிடையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை ஒரு காலக்கட்டத்தில் நிலைத்திருந்த பின்னர், ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.62,000-ஐ தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. சமீபத்தில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.65,000-ஐ கடந்த நிலையில், தற்போது ரூ.66,000-ஐ எட்டியுள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், மார்ச் 23ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது. சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.65,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு15 ரூபாய் குறைந்து ரூ. 8,215க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிலோ வெள்ளி ரூ.1,14,000-க்கும் விற்பனையாகிறது.
Read more: மும்பை: 13 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. பாதுகாப்பு காவலர் ஒருவர் பலி..!!