சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு உயரும்போது தங்கத்தின் விலை குறையும். ஆனால், இந்தியாவில் இதற்கு நேர் எதிர். இங்கு விற்கப்படும் 90 சதவீத தங்கம், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை தான். அவை டாலர் மதிப்பில் வாங்கப்படுவதால், தங்கம் விலையில் எப்போதும் தாக்கம் அதிகமாகவே இருக்கும்.
இதற்கிடையே, அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, பங்குச் சந்தைகள் அதிரடியாக சரிவை கண்டன. இதைத்தொடர்ந்து முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி அதிகளவில் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக பங்குச்சந்தையும் சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. இதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தங்கம் விலை புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.68,480 வரை விற்பனையாது.
கடந்த சில தினங்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று குறைய தொடங்கியது. அதன்படி, ஏப்ரல் 4 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.67,200-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.8,400க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை ரூ.4000 குறைந்து ஒரு கிலோ ரூ.1,08,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.