சர்வதேச பொருளாதார நிலைமை மற்றும் அமெரிக்க டாலருடன் ஒப்பிடும் போது இந்திய ரூபாயின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு தங்கத்தின் விலை தினசரி நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கேற்ப, கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தும் குறைந்தும் வந்தது.
இதற்கிடையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கத்தின் விலை ஒரு காலக்கட்டத்தில் நிலைத்திருந்த பின்னர், ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், தங்கத்தின் விலை முதல் முறையாக ரூ.62,000-ஐ தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. சமீபத்தில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.65,000-ஐ கடந்த நிலையில் கடந்த மார்ச் 20ஆம் தேதி 66,480-க்கு விற்பனையானது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்து விற்பனையாகிறது.
இந்நிலையில், மார்ச் 26ஆம் தேதியான இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,195 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.65,560க்கு விற்பனையாகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ. 1,11,000 விற்பனையாகிறது.