fbpx

Gold Rate | வரலாறு காணாத உச்சம் தொட்ட தங்கம் விலை.. ஒரு சவரன் இவ்வளவா? நகை பிரியர்களுக்கு இடி!

இந்தியாவை பொறுத்தவரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்நிலையில், புத்தாண்டில் உயரத் தொடங்கிய தங்கம் விலை மாற்றம் இல்லாமல் காணப்பட்டு, பின்னர் குறையத் தொடங்கியது. ஆனால், கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே சென்றது. அந்த வகையில், பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை அடைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 25 ரூபாய் உயர்ந்து 7,930 ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 63ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே நாளையோ அல்லது நாளை மறுதினமோ ஒரு கிராம் 8 ஆயிரம் ரூபாயை கடக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளியின் விலை மாற்றமின்றி, ஒரு கிலோ ரூ. 1,07,000 க்கு விற்பனையாகிறது.

Read more : இந்த தவறை செய்தால் ரூ.10 லட்சம் அபராதம்.. இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிகள் அறிவிப்பு..! 

English Summary

The price of gold reached an unprecedented high.. Is a razor so much?

Next Post

இந்தியாவில் களமிறங்க போகும் VinFast மின்சார கார்கள்.. அருமையான தோற்றம்.. சிறப்பம்சங்கள் என்னென்ன..?

Thu Feb 6 , 2025
VinFast EV: Vietnamese electric cars coming to India.. The look is stunning..

You May Like