மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான காய்கறிகளின் விலை அவ்வப்போது உயர்வதும் பின்னர் குறைவதுமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக, பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகிறார்கள்.
ஒரு கிலோ பீன்ஸின் விலை 120 ரூபாயாகவும், ஒரு கிலோ இஞ்சிியின் விலை 200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே அத்யாவசிய காய்கறிகளின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே போல சென்னை கோயம்பேடு சந்தையில் 70 ரூபாய்க்கு விற்கப்பட்ட தக்காளியின் நிலை இன்று ஒரு கிலோ 100 ரூபாயாக அதிகரித்துள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் தக்காளி விலை ஒரு கிலோ 110 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆகவே இதனை குறைப்பதற்கு அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற இல்லத்தரசிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.