fbpx

ஏப்ரல் 1 முதல் இந்தப் பொருட்களின் விலை உயரும்!…. மத்திய அரசு திட்டம்!… விவரம் உள்ளே!

ஏப்ரல் 1ம் தேதி முதல் சில பொருட்களின் விலையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இறக்குமதி வரியை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்காரணமாக ஏப்ரல் 1ம் தேதி முதல் சில பொருட்களின் விலையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், தனியார் ஜெட் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், நகைகள், உயர் பளபளப்பான காகிதம் ஆகியவை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கேமரா லென்ஸ்கள் மற்றும் மொபைல் போன்கள் போன்றவை விலை குறையும், மேலும் மின்சார சமையலறை புகைபோக்கிகள், தங்கம் மற்றும் பிளாட்டினம் ஆகியவைகள் ஏப்ரல் 1 முதல் விலை உயரும் என்று தெரிகிறது. மேலும், கேமரா லென்ஸ்கள், ஆய்வகத்தால் வளர்க்கப்படும் வைரங்கள், செல்லுலார் மொபைல் போன்கள், லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் மூலப்பொருட்கள் ஆகியவை விலை குறையும்.

மேலும், கேமரா லென்ஸ்கள், ஆய்வகத்தால் வளர்க்கப்படும் வைரங்கள், செல்லுலார் மொபைல் போன்கள், லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் மூலப்பொருட்கள் ஆகியவை விலை குறையும். இந்த நிலையில் ஏப்ரல் 1 முதல் விலை உயரும் பொருட்கள்: வீட்டில் எலக்ட்ரானிக் புகைபோக்கிகள், தங்கம், வெள்ளி பாத்திரங்கள், வன்பொன், சிகரெட், அணிகலன்கள் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் ஆகியவைகளின் விலை உயரும்.

ஏப்ரல் 1 முதல் விலை குறையும் பொருட்கள்: பொம்மைகள், மிதிவண்டிகள், டி.வி, மொபைல்கள், மின்சார வாகனங்கள், எல்இடி டிவி ஆகியவைகளின் விலை குறையும். மத்திய நிதி அமைச்சர் சீதாராமன் கூறியபடி சமையலறை மின்சார புகைபோக்கிக்கான சுங்க வரி 7.5% இல் இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது. ஆய்வகத்தால் வளர்க்கப்படும் வைரங்களைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் விதைகளுக்கான அடிப்படை சுங்க வரியையும் மத்திய அரசு குறைத்துள்ளது. மேலும் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக இறால் தீவனத்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு குறைக்கும் என்றும், காப்பர் ஸ்கிராப்பின் மீது 2.5 சதவீதம் சலுகை அடிப்படை சுங்க வரியை மையம் தொடரும் என்றும் அவர் கூறினார்.

Kokila

Next Post

சரிவை சந்தித்த ட்விட்டர்!... எலான் மஸ்க்கின் திட்டம் பலிக்கவில்லை!... 20 மில்லியன் டாலர் நஷ்டம்!...

Tue Mar 28 , 2023
எலான் மஸ்க்கின் கைக்கு சென்றநிலையில் ட்விட்டர் நிறுவனத்தின் மதிப்பு பாதியாக குறைந்துள்ளதாகவும் சுமார் 20 மில்லியன் டாலர் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தனியார் நிறுவனத்தின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை கடந்த ஆண்டு 44 பில்லியக்கு வாங்கி அதன் உரிமையாளரானார். இதனை தொடர்ந்து அவர் பல திட்டங்களை அறிவித்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக பணிநீக்க நடவடிக்கைகளை எடுத்தது […]

You May Like