ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், ரஷ்மிகா மந்தனா, காஜல் அகர்வால் உள்ளிட்டோர் நடித்த சிக்கந்தர் படம் ரம்ஜான் பண்டிகை ஸ்பெஷலாக இன்று ரிலீஸாகியிருக்கிறது. மேலும் சத்யராஜ், பிரதீக் பப்பர் போன்ற பாலிவுட் நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நீண்டகாலமாக ஹிட் இல்லாமல் இருக்கும் சல்மான் கானுக்கு இப்படம் வெற்றியைக் கொடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை சிக்கந்தர் பூர்த்தி செய்ததால்..? இல்லையா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சமூக வலைதளத்தில் ஒரு பயனர், சிக்கந்தர் சூப்பர் ஹிட் என்று கூறுகிறார். சல்மான் கானின் முந்தைய படங்களை விட இது மிகவும் நன்றாக உள்ளது. ஆக்ஷனுடன் எமோஷனையும் அருமையாக காட்டியுள்ளனர். பாடல்களும் நன்றாக உள்ளன. படம் முழுவதும் அருமையாக உள்ளது என படத்தை பற்றி பாசிட்டிவ் ஆக பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனர் பழைய படத்தை காபி அடித்து எடுத்தது போல் இருக்கிறது. படம் முழுக்க பார்த்த காட்சியை திரும்ப பார்ப்பது போலவே இருந்ததாக ஒருவர் பதிவிட்டுள்ளார். கதை மற்றும் திரைக்கதை சொதப்பலால் இப்படம் மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக, படத்திற்கான விமர்சனங்களும் கடுமையாக உள்ளதால் வணிக ரீதியாகவும் இப்படம் பாதிப்படையும் என்றே தெரிகிறது
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியுள்ள சிக்கந்தர் படத்திற்கு மோசமான முறையிலேயே விமர்சனங்கள் வந்துள்ளன.ஏ.ஆர் முருகதாஸ் சிக்கந்தர் படத்தின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்புவார். அது மதராஸி படத்திற்கு உதவியாக இருக்கும் என நினைத்தார்கள். ஆனால் சிக்கந்தர் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருவதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
சிக்கந்தர் படத்தின் வரவேற்பை பொறுத்துதான் மதராஸி படத்தை பார்க்கலாம் என்ற எதிர்பார்ப்போடு சிவகார்த்திகேயன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தால் மதராஸியின் வசூலையும் பாதிக்கும் என கூறப்படுகிறது. இதனால், சிவகார்த்திகேயனும் அப்செட்டில் இருக்கிறாராம்.
Read more: தமிழ்நாட்டில் கோடை வெயில் காரணமாகப் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை…!