fbpx

வரும் 11-ம் நடைபெற இருந்த போராட்டம் வாபஸ்.. ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவிப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. தமிழக அரசின் நிதி நிலைமை சீரானதும் இதுகுறித்து அரசு பரிசீலிக்கும் என்று முதலமைச்சர் தெரிவித்து வந்தார். இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்திருந்தனர்..

மேலும் வரும் 11-ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.. இந்த நிலையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ வேலு, அன்பில் மகேஷ் ஆகியோர் அடங்கிய குழு அந்த அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.. இந்த பேச்சுவார்த்தையில் அவர்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்ததுடன், போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.. மேலும் அவர்களின் கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் குழு உறுதியளித்தனர்..

இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, வரும் 11-ம் தேதி நடைபெற இருந்த போராட்டம் திரும்ப பெறப்படுவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.. 3 அமைச்சர்களின் வேண்டுகோளையும், முதலமைச்சரின் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மீதான அக்கறையை கருத்தில் கொண்டு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க முடிவெடுத்திருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது..

Maha

Next Post

சென்னை விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த மையம்.. பிரதமர் மோடி திறந்து வைத்தார்..

Sat Apr 8 , 2023
சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.. சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம், சென்னை விமான நிலையத்திற்கு வந்தார்.. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.. […]

You May Like