fbpx

தத்தளிக்கும் புதுச்சேரி.. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!!

நேற்றைய தினம் இரவு, ஃபெஞ்சல் புயலானது காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்திற்கு இடையே  கரையை கடந்த நிலையில் , புதுச்சேரியில் அதீத கனமழையானது பெய்தது. இதனால் பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. இந்த நிலையில், நாளை புதுச்சேரியில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

புதுச்சேரியில் புயல் கரையை கடந்து சென்ற நிலையில், பல்வேறு பகுதிகள் வெள்ளகாடாக மாறியுள்ளன. மேலும் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் சிரமத்திற்கு ஆளாகினார். பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு அதி கனமழை பெயதுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில்  48.4 cm மழை பதிவாகியுள்ளது.  இதற்கு முன்பு 1995இல் இதே போல மழை பெய்துள்ளது. இதனையடுத்து  புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள்,  கல்லூரிகளுக்கும் நாளை திங்கட்கிழமை அறிவித்து புதுசேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

Read more ; பரபரப்பு…! ஹெச்.ராஜா மீதான வழக்கு… நாளை தீர்ப்பு வழங்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம்…!

English Summary

The Puducherry government has ordered all the schools and colleges in Puducherry to be closed on Monday.

Next Post

புரட்டி போட்ட ஃபெஞ்சல் புயல்.. விழுப்புரத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!!

Sun Dec 1 , 2024
Tomorrow is a holiday for schools and colleges in Villupuram.

You May Like