கோரமண்டல் ரயிலின் எஞ்சின் மற்றும் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், ஒடிசா மாநிலம் பாஹனாகநகர் அருகே விபத்துக்குள்ளானதில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 900-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கோரமண்டல் ரயிலின் எஞ்சின் மற்றும் 11 பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரயிலின் A1, A2, H1, B2, B3, B4, B5, B6, B7, B8, B9 ஆகிய பெட்டிகள் தடம் புரண்டுள்ளது என ரயில்வே தெரிவித்துள்ளது.