fbpx

தென் தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை மையம் தகவல்..!!

தென் தமிழகத்தில் வரும் 18, 19ஆம் தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 18, 19ஆம் தேதிகளில் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 20, 21ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

இரவில் கால் பிடிப்பு பிரச்சனையால் கஷ்டப்படுறீங்களா.! இதுக்கு என்ன காரணம் தெரியுமா.?!

Wed Jan 17 , 2024
இரவு நேரத்தில் தூங்கும் போது ஒரு சிலருக்கு காலில் நரம்பு இழுத்துக் கொண்டு கால் பிடிப்பு பிரச்சனை ஏற்படும். இது ஒரு சில நேரங்களில் மிகுந்த வலியுடன், பிடிப்பு ஏற்பட்டு பின்பு சரியாகும். கால் பிடிப்பு ஏற்படுவதற்கான காரணத்தையும், அதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை குறித்தும் பார்க்கலாம்? கால் பிடிப்பு ஏற்படுவதற்கான காரணம்: நரம்பு இழுத்துக் கொண்டு கால் பிடிப்பு ஏற்படுவது சாதாரண பிரச்சனை தான் என்றாலும், அந்த […]

You May Like