fbpx

புது ரூல்ஸ்…! 2023 பல்கலைக்கழக மானியக்குழு விதி…! மத்திய அமைச்சர் வெளியீடு…!

பல்கலைக்கழக மானியக்குழு விதி 2023-ஐ மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.

தேசியக்கல்விக்கொள்கை 2020வுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தொடர்ச்சியாக மூன்று பருவங்களுக்கு என்ஏஏசி “ஏ” தரத்துடன் 3.01 சிஜிபிஏ பெற்றிருக்க வேண்டும் அல்லது என்ஐஆர்ஃஎப்-என் சிறப்புப் பிரிவில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்றிருக்க வேண்டும் அல்லது என்ஐஆர்ஃஎப்-என் ஒட்டுமொத்த தரவரிசையில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு முதல் 100 இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களுக்கு இணைய வழியாகவும் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பத்தாரர்களின் உரிய ஆவணங்களையும், வசதிகளையும் நிபுணர் குழு இணையவழியில் ஆய்வு செய்யும். இந்த புதிய விதிகள், தரத்தை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. என்ஏஏசி “ஏ” தரத்தைவிட, குறைந்த மதிப்பை பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அல்லது என்ஐஆர்ஃஎப்-என் தரவரிசையில் 100 இடங்களுக்கு மேல் இடம்பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், யுஜிசி நிபுணர் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

குறைகளை நிவர்த்தி செய்யாதபட்சத்தில் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியைத் திரும்ப பெற யுஜிசி பரிந்துரைக்கும். கட்டணம், அனுமதிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை போன்றவற்றில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உரிய விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.

Vignesh

Next Post

வங்கி மோசடி குறித்த வழக்கு | தனியார் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி உள்ளிட்ட 6 பேருக்கு சிறை தண்டனை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!

Sat Jun 3 , 2023
சென்னையை சேர்ந்த பல்பேப் இச்நிச்சி மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான பி. செந்தில்குமார், எஸ் ஜே எஸ் நிறுவன இயக்குனர்கள் டி ஆர் தனசேகர், கருணாநிதி மற்றும் ஜெயமுரளி, லதா பாஸ் ,செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்த 2008 ஆம் வருடம் போலியான ஆவணங்களை காட்டி இந்தியன் வங்கியில் கோடி கணக்கில் கடன் பெற்று மோசடி செய்ததாக புகார் வந்தனர். இதன் மூலமாக வங்கிக்கு ரூபாய் 4.19 கோடி […]
விடுதலையாகிறார் சவுக்கு சங்கர்..!! 4 வழக்குகளிலும் ஜாமீன்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

You May Like